அளவுக்கு அதிகமான மது – செங்கல்பட்டில் பரிதாபமாக உயிரிழந்த தஞ்சை மாணவி!

0570.jpg

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் விடிய விடிய அளவுக்கு அதிகமாக மது அருந்திய 19 வயது மாணவி, அதிகாலை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், மிகுந்த மது போதை உடலுக்கு ஒத்துக்கொள்ளாமல் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வீக் எண்ட் கொண்டாட்டம் – மது வீம்பு

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்வேதா (பெயர் மாற்றப்பட்டது), செங்கல்பட்டு படூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் 2ம் ஆண்டு பயிலும் மாணவி. ஏகாட்டூரில் ஹாஸ்டலில் தங்கி இருந்த அவர், விடுமுறையை தோழியுடன் கொண்டாட முடிவெடுத்தார்.

இதற்காக, தோழியின் அபார்ட்மென்டில் இரவு முழுவதும் சில நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால், அதிகாலை அவசரக் கோலத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வாந்தி, மயக்கம், பார்வை மங்கல் – நேருக்கு நேர் மரணம்!

காலையில் தொடர்ச்சியாக வாந்தி வந்ததால், நிலை மோசமானது. பார்வை மங்குகிறது என்று கூறிய நிலையில், தோழிகள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.

மதுவே காரணமா? – போலீசாரின் விசாரணை

முதற்கட்ட தகவலின்படி, மிகுந்த மது போதை, உடலுக்கு ஒத்துக்கொள்ளாமல் உயிரிழப்பிற்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும், தோழிகளுடன் சேர்ந்து மது அருந்தியவர்கள் யார்? அந்த மது எப்படி கிடைத்தது? என்ற கோணத்தில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாணவியின் மரண விசாரணை மற்றும் போஸ்ட் மார்ட்டம் அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கிறார்கள். இந்த சம்பவம், மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *