You are currently viewing அதிகாரியை வலையில் வீழ்த்திய வேலைக்கார பெண் – திருப்பத்தூரில் பரபரப்பு!

அதிகாரியை வலையில் வீழ்த்திய வேலைக்கார பெண் – திருப்பத்தூரில் பரபரப்பு!

0
0

திருப்பத்தூர்: அரசு அதிகாரியை சேர்ந்து கண்காணித்து, பின்னர் பணம் பறிக்க திட்டமிட்ட 2 பெண்கள் தொடர்பான சம்பவம் திருப்பத்தூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நண்பகல் வேலை – இரவு மிரட்டல்!

திருப்பத்தூர தலைமை அஞ்சலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றும் மாதேஸ்வரன் என்பவர், தனது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தாயை பராமரிக்க, “சன் லைட் ஹோம் கேர்” நிறுவனத்தில் வேலை பார்க்கும் நளினி என்பவரை வீட்டு வேலைக்காக நியமித்தார். சில நாட்களில், மாதேஸ்வரனுக்கும், நளினிக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நெருக்கத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயன்ற நளினி, மாதேஸ்வரனை நிர்வாணமாக இருக்கும் போது வீடியோ பதிவு செய்துள்ளார். பின்னர், அந்த வீடியோவை “சன் லைட் ஹோம் கேர்” நிறுவனம் நடத்தும் செல்வி என்பவருக்கு அனுப்பியுள்ளார்.

5 லட்சம் கேட்டு மிரட்டல் – பயந்த அதிகாரி

வீடியோ கையில் வந்தவுடன் செல்வி, மாதேஸ்வரனை 5 லட்சம் ரூபாய் தருமாறு மிரட்டியுள்ளார். பயந்துபோன அவர், முதல்கட்டமாக 2.3 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால், மீதமுள்ள தொகையையும் உடனே தருமாறு செல்வி தொடர்ந்து அழுத்தம் கொடுத்துள்ளார்.

கைது – சிறையில் மூவர்

மீதமுள்ள பணத்தை வசூலிக்க, செல்வி தனது நிறுவனத்தில் பணிபுரியும் விமல்ராஜை, மாதேஸ்வரனின் வீட்டிற்கே பணம் வாங்க அனுப்பியுள்ளார். அப்போது, வேறு வழியில்லாமல் மாதேஸ்வரன் போலீசில் புகார் அளித்தார்.
இதன் பின்னணியில் முழுக்க மூடிக்கிடந்த சூழ்ச்சி வெளிச்சத்துக்கு வந்தது. நளினி, செல்வி, விமல்ராஜ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம், அரசு அதிகாரியையே குறிவைத்து திட்டமிட்டு பணம் பறிக்க முயன்ற பரபரப்பான வழக்காக திருப்பத்தூரில் பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply