சென்னை: துளசி மாலை என்பது மிகவும் புனிதமானது, தெய்வீக சக்தி கொண்டது. பெருமாளுக்கு உகந்த துளசி, அதனால் ஆன மாலை அணிவது ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ஆனால், இதை அணிக்கும்போது கட்டாயமாக பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள் உள்ளன.
துளசி மாலை தெய்வீக காப்பு தரும், மன அமைதியை வழங்கும், ஆன்மீக முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். ஆனால், பயன்படுத்தும் முறையில் தவறு செய்யக் கூடாது. இதை அணியும்போது என்ன செய்யவே கூடாது? எந்த நேரங்களில் அணியக்கூடாது? என்பதை பார்க்கலாம்.
“துளசி மாலை அணியும் முன் செய்ய வேண்டியவை”
மஞ்சள் நீரில் ஊற வைத்து, பின்னர் கங்கை ஜலம் அல்லது கோமியம் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
பூஜை அறையில் மகாவிஷ்ணுவின் அருகே வைத்து வழிபட்டு, இறைவனின் அருளை பெற வேண்டும்.
அணியும்போது மனமும், உடலும் தூய்மையாக இருக்க வேண்டும்.
“துளசி மாலை அணியும் போது தவிர்க்க வேண்டியவை”
அசைவ உணவுகள் (மாமிசம், முட்டை, மீன்)
வெங்காயம், பூண்டு போன்ற உணவுகள்
போதைப்பொருட்கள் (மது, புகை, புகையிலை)
உடலுறவு – துளசி மாலை அணிந்தவர்களுக்கு உடலுறவு கொள்ளக்கூடாது என நம்பப்படுகிறது.
துளசி மாலையை மற்றவர்கள் அணியக்கூடாது – ஒருவர் அணிந்ததை, வேறு ஒருவர் பயன்படுத்த கூடாது.
குளிக்கும் போது, நீச்சல், உடற்பயிற்சி செய்யும்போது அணியக்கூடாது.
“துளசி மாலையின் ஆன்மீக பலன்கள்!”
தீய சக்திகளிலிருந்து காக்கும்!
தியானம், பிரார்த்தனை, மந்திரங்கள் சொல்லும்போது அணியலாம்.
வைகுண்ட பதவி பெற உதவும் – இறந்தவர்களுக்கு துளசி மாலை அணிவிக்கப்படும்.
பெருமாளின் அருளைப் பெற, வாழ்க்கையில் நன்மை ஏற்படும்.
துளசி மாலை அணிவது ஒரு ஆன்மீக சடங்கு மட்டுமல்ல, அது தெய்வீக கட்டுப்பாடுகளை பின்பற்றும் ஒரு வழிமுறையாகும். இதை மதிப்புடன் அணிந்தால், மனநிம்மதி, சக்தி, இறைவன் அருள் பெறலாம்.