கர்ப்பம் உறுதி செய்யப்பட்டவுடன் பெண்களுக்கு சில கேள்விகள் எழுவது சாதாரணம்.
மாடிப்படிகளில் ஏறலாமா? உடற்பயிற்சி செய்யலாமா? தரையில் படுக்கலாமா? போன்ற சந்தேகங்களுக்கு மகப்பேறு மருத்துவர் ஜெயந்தி விளக்கமளிக்கிறார்.
மாடி படிகளில் ஏறுதல்
மெதுவாகவும் கவனத்துடனும் ஏறி இறங்குவது முக்கியம்.
தினசரி வேலைகள்
தினசரி வேலைகளை கவனமாகவும் தடுமாறாமல் செய்துகொள்ளலாம்.
தரையில் உறங்கலாமா?
தாராளமாக தரையில் படுத்து உறங்கலாம், ஆனால் எழும்பும்போது கவனமாக இருக்க வேண்டும்.
உடற்பயிற்சி
முதல்மூன்று மாதங்களில் வாக்கிங், ஸ்ட்ரெச்சிங் போன்ற எளிய உடற்பயிற்சிகளை செய்யலாம். அடுத்த கட்டங்களில் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.
எவரெல்லாம் உடற்பயிற்சி செய்யக்கூடாது?
இரத்தப்போக்கு உள்ளவர்கள்
முந்தைய கர்ப்பத்தில் குறைபிறப்புச் சிக்கல் இருந்தவர்கள்
கர்ப்பப்பை வாயருகே நஞ்சுக்கொடி உள்ளவர்கள்
கர்ப்ப காலத்தில் அவசியமான தடுப்பூசிகள்
TT (Tetanus Toxoid) – 1.5 மாத இடைவெளியில் 2 முறை
இன்ப்ளுயன்சா தடுப்பூசி – 7வது மாதத்திற்குப் பிறகு
முக்கிய சத்துக்கள்
குழந்தையின் வளர்ச்சிக்காக போலிக் அமிலம், இரும்புச்சத்து, கால்சியம் மாத்திரைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
முதல்மூன்று மாதங்களில் ஸ்கேன் அவசியமா?
ஆம். குழந்தையின் இடஒழுங்கு, இதயத்துடிப்பு, எண்ணிக்கை, வளர்ச்சி, பிரசவ தேதி கணித்தல் மற்றும் பிற முக்கிய தகவல்களை தெரிந்துகொள்ள இதன் மூலம் உதவியாக இருக்கும்.
மருத்துவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்
கர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை அதிகரிக்கலாம்?
அலுவலக வேலை செய்யலாமா?
சாதாரண மருந்துகளை மெடிக்கல் ஷாப்பில் வாங்கி எடுத்துக்கொள்ளலாமா?
உடலுறவு கொள்ளலாமா?
பயணம் செய்யலாமா?
உங்கள் உடல்நிலைக்கு ஏற்ப மருத்துவரின் ஆலோசனைகளை பின்பற்றுவது பாதுகாப்பான கர்ப்ப காலத்திற்குத் துணை புரியும்.