தமிழக போக்குவரத்து துறையின் அதிரடி உத்தரவு!

New Strict Rules for Drivers and Connductors of TN Govt

தமிழக அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநருக்கு ஸ்கெட்ச்.! போக்குவரத்து துறை வெளியிட்ட புதிய கட்டுப்பாடுகள் :

பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வழிகாட்டுதல்கள்:

தமிழகத்தில் தினமும் லட்சக்கணக்கானோர் அரசுப் பேருந்துகளை நம்பியுள்ளனர். குறைந்த கட்டணம், பரவலான சேவை போன்ற காரணங்களால் இது மக்களின் முதன்மை தேர்வாக உள்ளது.

விடியல் திட்டத்தில் பெண்கள் இலவசமாகப் பேருந்தில் பயணிக்கலாம். இதனால் மாதந்தோறும் சுமார் ₹1000 சேமிக்கலாம். ஆனாலும், சில இடங்களில் பேருந்து சேவை சரியாக இல்லை என்று புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

போக்குவரத்துத் துறையின் புதிய உத்தரவின்படி, முறையான அறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், பேருந்து பணிமனைகளில் தினமும் இயக்கப்பட வேண்டிய பேருந்துகளுக்கான அட்டவணையை முன்கூட்டியே தயாரித்து, சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களிடம் கையொப்பம் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேருந்து இயக்கம்: கட்டுப்பாடுகள் :

1.அவசர விடுப்புக்கு முன் அறிவித்தால் மாற்று ஏற்பாடு.
2.நெரிசல் நேர பேருந்துகளை (General Shift) ஒற்றைச் சுழற்சியாக (Single Shift) இயக்கக் கூடாது.
3.முகூர்த்த நாட்களில் அனைத்து பேருந்துகளும் இயங்க வேண்டும்.
4.மகளிர் விடியல் கட்டணப் பேருந்துகள் தினமும் இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.

வேலைக்கு ஒழுங்காக வராத, குறிப்பாக முன் தகவல் கொடுக்காமல் விடுப்பு எடுக்கும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மீது கண்டிப்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும், காலியாக உள்ள பணியிடங்களில் ஸ்டால்வார்ட் (Stalwart) / டீம் ஃபோர்ஸ் (Team Force) ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Summary : To address service disruptions, the Tamil Nadu transport department is implementing stricter rules for bus drivers and conductors regarding leave and mandatory bus operation, especially for women’s free travel services.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *