அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு: 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0163.jpg

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலின் மருத்துவ மையத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப, இந்து சமய அறநிலையத் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மொத்தம் 6 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ள இந்து சமயத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் நவம்பர் 24, 2025க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள் & தகுதிகள்

1. மருத்துவர் – 2 இடங்கள்

  • தகுதி: MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்

  • சம்பளம்: ₹36,700 – ₹1,16,200

2. உதவி செவிலியர் – 2 இடங்கள்

  • தகுதி: Auxiliary Nurse & Midwife Certificate அல்லது Nursing Diploma

  • சம்பளம்: ₹18,500 – ₹58,600

3. நர்சிங் அசிஸ்டெண்ட் – 2 இடங்கள்

  • தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Health Worker Certificate

  • சம்பளம்: ₹11,600 – ₹36,800

வயது வரம்பு:

18 முதல் 45 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை:

நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய: melmalayanurangalamman.hrce.tn.gov.in

  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
    உதவி ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், மேல்மலையனூர், விழுப்புரம் – 604204.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

24 நவம்பர் 2025

Summary :
TN HRCE Department invites applications for 6 posts at Melmalayanur Angalamman Temple. 12th pass to MBBS eligible. Apply before Nov 24, 2025.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *