You are currently viewing TN Loan Waiver Scheme | நகை கடன் தள்ளுபடி!

TN Loan Waiver Scheme | நகை கடன் தள்ளுபடி!

0
0

பொதுமக்களுக்கு நகை கடன் தள்ளுபடி! விவசாயிக்கு பயிர் கடன்! தமிழக அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்! – TN Loan Waiver Scheme

சீர்மிகு திராவிட மாடல் ஆட்சியின் கீழ் தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும், அனைத்து மக்களும் பயனடையும் வகையில் கடந்த பத்தாண்டுகளை விட 2024-25ல் 9.69% அதிக வளர்ச்சி கண்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் கூட்டுறவுத் துறையின் வாயிலாகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.

குறிப்பாக, 11.83 இலட்சம் பயனாளிகளுக்கு ₹4,918 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, அவர்கள் அடமானம் வைத்திருந்த நகைகள் திருப்பியளிக்கப்பட்டுள்ளன.

மகளிர் சுய உதவிக் குழு :

மேலும், மகளிர் சுய உதவிக் குழுக்களின் ₹2,117 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மகளிர் பயனடைந்துள்ளனர். விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

2021 ஏப்ரல் 7 முதல் 2025 மார்ச் 31 வரை விவசாயிகளுக்கு ₹54,968 கோடி பயிர்க்கடனாக வழங்கப்பட்டுள்ளது.

உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பு மற்றும் இதர பணிகளுக்காக 12,28,416 விவசாயிகளுக்கு ₹6,610 கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் :

சமூக நீதியை நிலைநாட்டும் வகையில், 16,836 பணிபுரியும் பெண்களுக்கு ₹478 கோடியும், 51,795 மகளிர் தொழில்முனைவோருக்கு ₹298 கோடியும் கடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், குடும்பத்திற்காக உழைக்கும் மகளிரை போற்றும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட’ உதவித்தொகைக்காக மத்திய கூட்டுறவு வங்கிகளில் 8.35 இலட்சம் வங்கிக் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன.

Summary : TN Loan Waiver Scheme

The Tamil Nadu government has announced significant financial relief through its Cooperative Department.

This includes waiving ₹4,918 crore in jewel loans for over 1.18 million people and ₹2,117 crore for over 1 million women in self-help groups.

Farmers have also received substantial interest-free crop loans, totaling ₹54,968 crore.

Leave a Reply