You are currently viewing TN Padma Award Winners | தமிழக பத்ம விருது பட்டியல்

TN Padma Award Winners | தமிழக பத்ம விருது பட்டியல்

0
0

அஜித், அஷ்வின் மட்டுமல்ல.. தமிழகத்தில் இருந்து பத்ம விருதை பெற்ற 13 பேர்! முழு லிஸ்ட்! – TN Padma Award Winners

TN Padma Award Winners

1. 2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன்
விருது வழங்கப்பட்டது.

நேற்று (ஏப்ரல் 28) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் அஜித்குமாருக்கு
பத்ம பூஷன் விருதை வழங்கிக் கௌரவித்தார். இந்த நிகழ்வு புது டெல்லியில் நடைபெற்றது.

2. தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவதாக முன்னதாக
அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 28) புது டெல்லியில் நடைபெற்ற விழாவில், குடியரசுத்
தலைவர் அவர்கள் அஸ்வினுக்கு அந்த மதிப்புமிக்க விருதை அளித்துச் சிறப்பித்தார்.

3. பிரபல சமையல் கலைஞர் செஃப். தாமோதரனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் என்று முன்னதாக
அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் செஃப்.
தாமோதரனுக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி பெருமைப்படுத்தினார்.

4. தினமலர் வெளியீட்டாளரான லக்ஷ்மிபதி ராம சுப்பையர் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவதாக
முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 29) புது டெல்லியில் நடைபெற்ற
விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் லக்ஷ்மிபதி ராம சுப்பையருக்கு பத்மஸ்ரீ விருதை
அளித்து கௌரவித்தார்.

5. புகழ்பெற்ற தொழிலதிபர் நல்லி குப்புசாமி அவர்களுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.

கலை,பண்பாடு மற்றும் கல்வி போன்ற பல்வேறு துறைகளில் அவர் அளித்திருக்கும் நிதியுதவிகளைப் பாராட்டி
இந்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.

6.பிரபல நடிகையும், மிகச்சிறந்த நடனக் கலைஞருமான ஷோபனாவுக்கு கலைத்துறையில் வழங்கப்படும்
உயரிய விருதான பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 28) புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் ஷோபனாவுக்கு        இந்தமதிப்புமிக்க விருதை வழங்கி சிறப்பித்தார்.

7. குருவாயூர் துரை,

8. எ.டி.ஸ்ரீனிவாஸ்,

9. புரிசை கண்ணப்ப சம்பந்தன்,

10.ஆர்.ஜி.சந்திரமோகன்,

11.ராதாகிருஷ்ணன் தேவசானாபதி,

12.சீனி விஸ்வநாதன்,

13.வேலு ஆசான் ஆகியோர் இன்று பத்மஸ்ரீ பெற்றனர்.

Summary:

In 2025, Tamil Nadu has received an impressive recognition with a total of 13 Padma Awards.

The prestigious honors include Padma Bhushan for actor Ajith Kumar and industrialist Nalli Kuppuswami, as well as for renowned actress and dancer Shobana.

Additionally, Padma Shri has been conferred upon cricketer R. Ashwin, popular chef Damodharan, Dinamalar publisher Lakshmipathi Rama Subbaiyer, and seven other distinguished individuals:

Guruvayur Dorai, A.D. Sreenivas, Purisai Kannappa Sambandan, R.G. Chandramohan, Radhakrishnan Devasanapathi, Seeni Viswanathan, and Velu Aasan.

This significant achievement highlights the diverse talents and contributions from Tamil Nadu across various fields.

Leave a Reply