‘பீஸ்ட்’ வில்லன் மறுபடியும் சிக்கலா? கொச்சியில் பரபரப்பு! – Tom Chacko Problems
Tom Chacko Problems – ஹோட்டலில் இருந்து தப்பியோடிய “குட் பேட் அக்லி” வில்லன் நடிகர்,கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’-ல் நடிகர் மற்றும் அரசியல்வாதியாக நடித்திருந்தார்.
போதைப்பொருள் வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த இவர், தற்போது ‘குட் பேட் அக்லி’ படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.
ஷைன் டாம் சாக்கோ மீது சக நடிகை போதையில் தகாத செயலில் ஈடுபட்டதாக புகார் அளித்தார். இந்த சர்ச்சை அடங்குவதற்குள் அவர் மீண்டும் வேறொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தப்பிக்கும் காட்சிகள் :
கொச்சியில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனைக்கு வந்தபோது, நடிகர் ஷைன் டோம் ஷாக்கோ ஹோட்டலில் இருந்து தப்பி ஓடினார்.
ஜன்னல் வழியே தப்பிக்கும் காட்சிகள் வைரலாகின்றன. அவர் அறையில் போதைப்பொருள் எதுவும் கிடைக்கவில்லை,
ஆனால் அவருடன் இருந்த பெண் விசாரிக்கப்படுகிறார்.ஷாக்கோ கொச்சி ஹோட்டலுக்கு அதிகாலையில் வந்தார், தோழி தனியாக அறை எடுத்தார், நண்பர்கள் மாலையில் வந்தனர்.
2015ல் போதைப்பொருள் வழக்கில் கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சக நடிகையின் புகார் மற்றும் திரையுலகில் அதிர்வலைகள் :
அவருடன் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் நடிக்கும் சக நடிகை ஒருவர், ஷைன் டாம் சாக்கோ போதையில் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் அளித்தார்.
ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளிவந்திருந்த ஷைன் டாம் சாக்கோவின் இந்த புதிய சர்ச்சை, அவரது நற்பெயருக்கு மேலும் களங்கம் விளைவித்தது.
இந்த விவகாரம் இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், தற்போது அவர் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளிடம் இருந்து தப்பியோடிய சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary:
Malayalam actor Shine Tom Chacko, known for his roles in ‘Beast’ and ‘Jigarthanda Double X’,
He was involved in another controversy when he allegedly escaped from a hotel in Kochi during a raid by anti-narcotics officials.
This incident follows a recent complaint of misconduct against him by a co-actress.
While no drugs were found in his room, a woman who was with him is being questioned. He had previously been arrested in a drug case in 2015
Pingback: Actor Shine Drugs |ஷைன்:போதை, தப்பித்தல்,விசாரணை! - tamilnewstime.com