திருச்சியில் பரபரப்பு: காவலர் குடியிருப்பில் நுழைந்த இளைஞர் வெட்டி படுகொலை – ஸ்டாலின் வருகையால் நகரம் பதற்றம்

0235.jpg

திருச்சியில் பட்டப் பகலில் நடந்த கொலைச் சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீமநகர் மார்சிங் பேட்டை அருகே உள்ள காவலர் குடியிருப்பு பகுதியில் சாலையோரமாக சென்ற இளைஞரை ஒரு கும்பல் துரத்தி வந்தது. உயிர் தப்பிக்க அவர் காவலர் குடியிருப்புக்குள் ஓடிச் சென்றார். ஆனால், கும்பல் துரத்தி உள்ளே நுழைந்து, அவரை அங்கேயே வெட்டிக்கொலை செய்தது.

இந்த சம்பவம் நடந்த நேரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்தார். காவலர் குடியிருப்பில் இத்தகைய கொலை நடந்தது காரணமாக, நகரம் முழுவதும் பரபரப்பு நிலவுகிறது.

முதற்கட்ட விசாரணையில், கொல்லப்பட்டவர் தாமரைசெல்வன் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொலைக்குப் பிறகு தப்பிச் சென்ற ஐந்து பேர் கொண்ட கும்பலில் ஒருவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மீதமுள்ளவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Summary :
A gang chased and hacked a 24-year-old man to death inside Trichy police quarters while CM Stalin was in the city, causing panic.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *