தமிழ்நாட்டு மக்களை அவதூறு பேசும் ஆர்.எஸ்.எஸ், ஆளுநர் ரவி: திருச்சி தி.க. ஆர்ப்பாட்டம்

282.jpg

தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் அவதூறு பேசிவரும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து, திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஜங்சன் காதிகிராப்ட் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பி. மலர்மன்னன் தலைமை வகித்தார். திராவிடர் கழக மாவட்ட தலைவர் ஞா. ஆரோக்கியராஜ், மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு. சேகர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தலைமைக்கழக சொற்பொழிவாளர் மற்றும் வழக்குரைஞர் பூவை புலிகேசி ஆர்ப்பாட்டத்துக்கான விளக்கக் கண்டன உரையாற்றினார். அவர் பேசும்போது, “தமிழ்நாட்டை பீகாரைப் போன்ற வன்முறை மாநிலமாக மாற்ற ஆர்.எஸ்.எஸ்–ஆளுநர் ரவி திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். அவருடைய நோக்கம் தமிழ்நாட்டில் ஒருபோதும் நிறைவேறாது. இது பெரியார் மண், இங்கு செயல்படுவது திராவிட மாடல் அரசு,” என தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத்தின் பல்வேறு பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். இறுதியாக, மாவட்ட செயலாளர் மகாமணி நன்றியுரையாற்றினார்.

Summary :

Dravidar Kazhagam held a protest in Trichy condemning RSS and Governor R.N. Ravi for derogatory remarks against Tamil Nadu and its people.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *