குட் பேட் அக்லி ரிலீஸுக்கு பின் திரிஷா போட்ட காட்டமான பதிவு; அவரை யார் என்ன சொன்னார்கள்?
திரிஷா, ‘மெளனம் பேசியதே’ மூலம் அறிமுகமாகி 20 வருஷமா கோலிவுட்ல முன்னணி நடிகையா இருக்காங்க. இந்த வருஷம் அவங்களுக்கு 3 படங்கள் வந்துச்சு. அதுல டொவினோ தாமஸோட நடிச்ச ‘ஐடென்டிட்டி’ நல்லா போச்சு. ஆனா, அஜித்தோட நடிச்ச ‘விடாமுயற்சி’ படம் சரியா போகல. இது அவங்களுக்கு ஒரு அதிர்ச்சியான விஷயம் தான்.
கம்பேக் கொடுத்த திரிஷா :
தோல்வியில் இருந்து கம்பேக் கொடுக்கும் விதமாக நடிகை திரிஷாவும் அஜித்தும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்த படம் குட் பேட் அக்லி. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார்.
இப்படம் ஏப்ரல் 10ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. அஜித் ரசிகர்களுக்கு பக்கா ட்ரீட் ஆக இப்படம் அமைந்திருந்தது.
இப்படத்திற்கு அஜித் ரசிகர்கள் இடையே அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் படக்குழு செம ஹாப்பியாக இருந்தாலும், இப்படத்தின் ரிலீசுக்கு பின்னர் நடிகை திரிஷா கடும் கோபத்தில் இருக்கிறாராம்.
லேடி சூப்பர் ஸ்டார்” பஞ்சாயத்து! திரிஷா ஃபயர்! :
என்னய்யா இது புதுசா? நம்ம திரிஷாவுக்கு ஏன் இம்புட்டு டென்ஷன்? காரணம் நம்ம நயன்தாரா ஃபேன்ஸாம்ல! “குட் பேட் அக்லி”-ல திரிஷாவோட நடிப்பை அவங்க ஃபேன்ஸ் தூக்கி வச்சுப் பேச, நயன் ஃபேன்ஸ் சும்மா விடுவாங்களா? “நடிப்பு சரியில்ல”, “20 வருஷமா டப்பிங்கே வரல”ன்னு வச்சு செஞ்சிருக்காங்க! ரெண்டு பக்கமும் சோசியல் மீடியால ஒரே களேபரமாம்! யாரு ஜெயிப்பான்னு பார்ப்போம்!
“டாக்ஸிக்”ன்னு திரிஷா யாரை குத்தி காட்டுறாங்கன்னு பார்த்தீங்களா?
நயன்தாரா ஃபேன்ஸ வச்சு செஞ்சிட்டாங்க போல! ரெண்டு பேருக்கும் ஏதோ முட்டல் மோதல்! டென்ஷனான நம்ம திரிஷா, நயன்தாரா படத்தோட பேரையே வச்சு ஒரு போஸ்ட் போட்டு எல்லாரையும் திரும்பி பார்க்க வச்சுட்டாங்க.
“டாக்ஸிக்”ன்னு போட்டதுதான் ஹைலைட்டே! நெட்டிசன்ஸ்லாம் இத வெச்சுதான் கணக்குப் போடுறாங்க. என்ன நடக்கப் போகுதோ!
Summary : A social media spat between Trisha’s and Nayanthara’s fans, following praise for Trisha’s role in “Good Bad Ugly,” reportedly led to Trisha posting an angry message with the word “Toxic,” seemingly directed at the critical Nayanthara fanbase.