உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஆக சிறந்த உணவு – துளசி அடை

Untitled-design-54.png

நம் வீட்டின் முன் துளசி செடி இருந்தால் அது ஒரு மருந்தகம் என்று சொல்லலாம். துளசி செடி வெறும் தெய்வீக செடி மட்டுமல்ல , அது ஒரு அற்புதமான இயற்கை மருந்தும் கூட. இதன் இலைகள் காய்ச்சல், சளி, தொண்டை வலி, ஜீரண கோளாறு போன்ற பல பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வாக செயல்படுகிறது.

இப்படி பல நன்மைகள் நிறைந்த துளசியை, நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள ஒரு சிறந்த வழி  “துளசி அடை”

அடை என்பது தென்னிந்திய பாரம்பரிய உணவாகும். சாதாரண அடைக்கு மாறாக, இதில் துளசி இலைகளை அரைத்து சேர்ப்பதால் தனித்துவம் அதிகம்.

இதனால் அடையில் ஒரு சிறிய கசப்பு-இனிப்பு கலந்த நறுமணம் வரும். அதே சமயம் உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியையும் தரும்.

கடந்த சில தினங்களில் மழை ,பனி ,வானிலை மாற்றம் காரணமாக நம்மில் பலருக்கு காய்ச்சல், சளி, தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் நம்மில் பலர்க்கு உடலில் ஏற்பட்டு இருக்கும். அதற்கு தீர்வு ஒன்று கொண்டுவந்து உள்ளேன்.

துளசி அடை:

தேவையானவை:

  1.  துளசி இலை – அரை கப்
  2. புழுங்கல் அரிசி -1 கப்
  3. பச்சரிசி – அரை கப்
  4. துவரம்பருப்பு – 1 கப்
  5. கடலைப்பருப்பு – அரை கப்
  6. தேங்காய்ப்பூ – அரை கப்
  7. காய்ந்த மிளகாய் -10
  8. சின்ன வெங்காயம் -5
  9. பூண்டு -10 பல்
  10. சோம்பு -ஒரு டீஸ்பூன்
  11. உப்பு ,எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை

துளசி இலையை அலசி ஆய்ந்து வைக்கவும்.அரிசி வகைகளையும் ,பருப்பு வகைகளையும் தனித்தனியாக ஊற விடவும்.

சின்ன வெங்காயம் ,பூண்டு ஆகியவற்றை பொடிப்பொடியாக அரியவும். மிளகாய் ,சோம்பை நைஸாக அரைக்கவும்.

அரிசி,பருப்பு வகைகள் ஊறியதும் தனித்தனியாக அரைத்து கொள்ளவும்.உப்பு ,தேங்காய்ப்பூ ,துளசி இலை ,வெங்காயம் ,பூண்டு, அரைத்த மிளகாய் ,சோம்பு விழுது, அரிசி ,பருப்பு மாவோடு கலந்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து, தோசை ஊற்றி எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் திருப்பிப்போட்டு எடுத்தால் எடுத்தால்..மிகச்சிறந்த ருசியான கார அடை அல்லது துளசி அடை ரெடி.

துளசி அடை என்பது சுவையையும் ஆரோக்கியத்தையும் சேர்ந்த பாரம்பரிய உணவு. இது நம் உடலை நோய்களிலிருந்து காக்கும் இயற்கையான மருந்தாகவும் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளத்தக்கதாகவும் இருக்கும்.

Summary:

Tulasi Adai is a traditional South Indian dish that blends flavor with health. Made with holy basil leaves, rice, and lentils, it’s packed with natural goodness. This recipe helps improve digestion and immunity, especially during cold seasons. A perfect mix of tradition, taste, and wellness in every bite.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *