அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! கோவையை குறி வைத்து தேதி குறித்த தவெக – TVK Next Step
TVK Next Step – சட்டமன்றத் தேர்தலுக்குக் குறுகிய காலமே இருப்பதால், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி வியூகங்களை வகுப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கட்சியின் அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக, அவர் கோயம்புத்தூரில் 23 மாவட்டச் செயலாளர்களுடன் ஒரு முக்கிய கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.
தமிழக மக்கள் ஆதரவால், தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிப் பாதை ஆரம்பம் முதலே தெளிவாக உள்ளது என்று பொதுச்செயலாளர் ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கோவையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் :
கோவை மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் சந்திப்பு. நமது செல்வாக்கு கூடிக் கொண்டே போகிறது.
கொடி அறிமுகம், வெற்றித் திருவிழா, இரண்டாம் ஆண்டுத் தொடக்கம் மற்றும் மக்கள் பணி மூலம் இதை உணர்கிறோம்.
தமிழக மக்களின் விருப்பப்படி, கழக வாக்குச்சாவடிப் பிரதிநிதிகள் கருத்தரங்கு 2025 ஏப்ரல் 26, 27 கோயம்புத்தூர் எஸ்.என்.எஸ். கல்லூரியில் நடக்கவுள்ளது. தலைவர் இசைவுடன் இதை உங்களுடன் பகிர்கிறோம்.
மாவட்ட செயலாளர்களோடு ஆலோசனை :
இரு நாள் கருத்தரங்கில், அட்டவணைப்படி மாவட்ட முகவர்கள் பங்கேற்பார்கள். ஆட்சி மாற்றம், 2026 தேர்தல் பணிகள் மற்றும் கழக கடமைகள் குறித்து தலைவர் விளக்கவுரை அளிப்பார்.
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான அஸ்திவாரமே வாக்காளர்களும், வாக்குச்சாவடிப் பிரதிநிதிகளும்தான்.
அனைத்துத் தமிழக மக்களின் விருப்பத்தை நிறைவேற்றவுள்ள நம் தலைவரின் கைகளுக்குப் பலம் சேர்ப்போம்.
வெற்றி மாலை சூடுவோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Summary:
Tamilaga Vettri Kazhagam (TVK) leader Vijay is actively strategizing for the upcoming Tamil Nadu elections.
He is scheduled to hold a crucial meeting with 23 district secretaries in Coimbatore to discuss the party’s future course of action.
The party’s general secretary has stated that TVK’s path to victory is clear due to public support.
Following this, a key workshop for booth-level representatives is planned for April 26th and 27th, 2025, in Coimbatore, where Vijay will address election preparations and party responsibilities.