You are currently viewing Type 5 Diabetes | புதிய வகை நீரிழிவு-அதிர்ச்சித் தகவல்!

Type 5 Diabetes | புதிய வகை நீரிழிவு-அதிர்ச்சித் தகவல்!

0
0

டைப் 5 சர்க்கரை நோய் : மருத்துவர்கள் எச்சரிக்கை! புதிய ஆபத்து!-Type 5 Diabetes

Type 5 Diabetes : டைப் 5 நீரிழிவு நோய் : நீரிழிவு நோய் பெரும்பாலும் மரபணு காரணங்களால் குழந்தைகளுக்கு ஏற்படலாம்.

பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால், குழந்தைகளுக்கும் வருவதற்கான வாய்ப்பு 50 சதவீதம் உள்ளது.

இதில் டைப் 1, டைப் 2 என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்போது புதிதாக டைப் 5 நீரிழிவு நோய் என்று ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நோய் சிறுவயதினரைத் தாக்கலாம். குறிப்பாக பதின்வயது அல்லது 20 வயதில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த டைப் 5 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சர்க்கரை வியாதி:

சர்க்கரை நோய் வருவதற்கு முக்கிய காரணம் பரம்பரை என்று சொல்லப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், அளவுக்கு அதிகமாக சாப்பிடுபவர்களுக்கும், உடற்பயிற்சி போன்ற எந்த வேலையும் செய்யாதவர்களுக்கும் இந்த நோய் வர அதிக வாய்ப்புள்ளது.

டைப் 1 சர்க்கரை நோய் பரம்பரையாகவோ அல்லது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலோ வரலாம்.

டைப் 2 சர்க்கரை நோய் மரபணுக்கள், ஒழுங்கற்ற உணவுப் பழக்கங்கள் மற்றும் சரியான உடற்பயிற்சி இல்லாததால் உண்டாகிறது.

இந்தியாவில் அதிக பேருக்கு இருப்பது டைப் 2 சர்க்கரை நோய் தான்.

இந்த நோய்களை கட்டுக்குள் வைப்பதோடு மட்டுமல்லாமல், இந்தியாவில டைப் 5 நீரிழிவு நோயும் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

டைப் 5 நீரிழிவு நோய்:

சமீபத்தில் பாங்காக்கில் நடந்த நீரிழிவு நோய் தொடர்பான கருத்தரங்கில் பேசப்பட்ட விஷயங்கள் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளன.

இந்த மாநாட்டில் டைப் 5 நீரிழிவு நோய் பற்றி குறிப்பிடப்பட்டது.

இந்த நோய் இந்தியா, பாகிஸ்தான், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தவிர்க்க, வளரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த, சமச்சீரான உணவை வழங்க வேண்டியது அவசியம்.

Summary:

A new type of diabetes, referred to as Type 5, has been identified, primarily affecting adolescents and young adults, particularly those with nutritional deficiencies.

Unlike Type 1 and Type 2 diabetes, which are often linked to genetics, lifestyle, or autoimmune issues, Type 5 diabetes appears to be prevalent in regions like India, Pakistan, and Africa.

The article highlights the discussions at a recent diabetes conference in Bangkok, emphasizing the importance of balanced, nutrient-rich diets for growing children to prevent this new form of the disease.

Leave a Reply