சென்னை: தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக தீபாவளி வாழ்த்து தெரிவித்த விதம் சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 20 அன்று கொண்டாடப்படவுள்ள தீபாவளியை முன்னிட்டு, சென்னை பிராட்வேயில் திமுக சார்பில் பரிசு பொருட்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களுக்குப் பரிசுகள் வழங்கினார்.
அந்த நிகழ்வில் உரையாற்றியபோது, “இங்கே வந்த சிலர் என்ன சொல்லி வாழ்த்துவது என்று குழப்பப்பட்டனர். ‘தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லலாமா? வேண்டாமா?’ என யோசித்தனர். நான் சொல்லுகிறேன் — நம்பிக்கை உள்ளவர்களுக்குத் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்,” என்று உதயநிதி தெரிவித்தார்.
அவரின் இந்தக் கருத்து நிகழ்வில் இருந்தவர்களின் கைதட்டலையும், ஆன்லைனில் பல்வேறு எதிர்வினைகளையும் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் இது அரசியல் மற்றும் மத சார்ந்த விவாதமாக மாறியுள்ளது.
Summary :
Udhayanidhi Stalin’s selective Diwali greeting — “Wishes to believers” — triggers mixed reactions and online debate across Tamil Nadu.