மலேசியா செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு இனி கையில் பணம் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. யு.பி.ஐ (UPI) மூலம் எளிதாகவும் பாதுகாப்பாகவும் பணப் பரிவர்த்தனைகள் செய்யலாம்.

நாடெங்கும் இன்று யு.பி.ஐ ஒரு அன்றாட வாழ்வின் அங்கமாகி விட்டது — தேநீர், பெட்ரோல், மளிகை என அனைத்திற்கும் அதுவே வழி. ஆனால் இதுவரை வெளிநாடுகளில் யு.பி.ஐ இயங்காததால், சுற்றுலா பயணிகள் நாணய மாற்றம் செய்து செல்ல வேண்டிய சிரமம் இருந்தது.
இந்நிலையில், மலேசியா தற்போது யு.பி.ஐ சேவையை ஏற்றுக்கொண்ட நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளது. இதன் மூலம், இந்தியர்கள் தங்கள் பீம் (BHIM) போன்ற செயலிகள் மூலம் மலேசியாவிலும் நேரடியாக பணம் செலுத்த முடியும்.
மேலும், காசு (cash) மற்றும் சர்வதேச கார்டுகளும் (international cards) இயல்பாக பயன்படுத்தலாம் என்று மலேசிய அரசு தெரிவித்துள்ளது.
2024-இல் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் மலேசியாவுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் மொத்தம் ₹110 பில்லியன் அளவுக்கு செலவிட்டதாகத் தகவல். இதுவே முந்தைய ஆண்டைவிட 71% அதிகம் ஆகும். யு.பி.ஐ சேவை அறிமுகம், இந்திய சுற்றுலாப் பயணிகளின் அனுபவத்தை மேலும் சுலபப்படுத்தும் என நம்பப்படுகிறது.
ஏற்கனவே பூடான், நேபாள், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, மொரீஷியஸ் போன்ற நாடுகளும் யு.பி.ஐ பரிவர்த்தனையை நடைமுறையில் கொண்டு வந்துள்ளன.
Summary :
Malaysia introduces UPI payment system, allowing Indian tourists to make instant, cash-free transactions — a major step for seamless travel.









