நிர்வாகச் சீர்திருத்தங்கள், செலவினக் குறைப்பு மற்றும் திறனை மேம்படுத்தும் நோக்கில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பதவி ஏற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, அரசாங்கத்தின் செயல்திறன் துறையின் தலைவர் பொறுப்பு பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அரசாங்கத்தின் முக்கிய தகவல்களைப் பெறும் அதிகாரமும் அவருக்கு அளிக்கப்பட்டது.
இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனங்களுக்கு முன்பு கடந்த சில நாட்களாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்கா முழுவதும் உள்ள 277 டெஸ்லா விற்பனை நிலையங்களின் முன்பு, நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
அதில், எலான் மஸ்க் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். சில இடங்களில், டெஸ்லா கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
Summary : Widespread protests erupted across the US, with demonstrators targeting Tesla showrooms and even setting cars on fire. This action was a direct response to Elon Musk’s appointment to a key government position, granting him access to sensitive information. Protesters demand his resignation.