குழந்தை பெற்றுக் கொள்ளும் நோக்கில் பயணம் செய்தால் விசா இல்லை – அமெரிக்கா கடும் எச்சரிக்கை

410.jpg

குழந்தை பெற்றுக் கொள்ளும் நோக்கத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுலா விசா பெற முயற்சிப்பவர்களுக்கு விசா வழங்கப்படாது என்று அமெரிக்கா மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், விசா நடைமுறைகளில் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க வெளிவுறவுத் துறையின் புதிய சமூக ஊடக ஆய்வு விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் இந்தியாவில் எச்.1பி விசாவுக்காக விண்ணப்பித்திருந்த பலரின் நேர்காணல்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக டிசம்பர் 15 அல்லது அதற்குப் பிறகு திட்டமிடப்பட்டிருந்த நேர்காணல்கள் ரத்து செய்யப்பட்டு, அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் பலர் அதிர்ச்சி மற்றும் கவலையில் உள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், சிலர் சுற்றுலா விசா மூலம் அமெரிக்காவுக்கு சென்று குழந்தை பெற்றுக் கொண்டு, அந்தக் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை பெற முயற்சிப்பதாக டிரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. இதுபோன்ற நடைமுறைகளைத் தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமெரிக்கா முன்னதாகவே அறிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, குழந்தை பெற்றுக் கொள்ளும் நோக்கமே பயணத்தின் முதன்மை காரணம் என அதிகாரிகள் கருதினால், அந்த நபர்களின் சுற்றுலா விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று அமெரிக்கா மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது சமூக வலைதளப் பதிவில்,
“குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை பெறும் நோக்கில் அமெரிக்காவில் பிரசவம் செய்வதே பயணத்தின் முக்கிய நோக்கம் என்று அதிகாரிகள் நம்பினால், அந்த சுற்றுலா விசா விண்ணப்பங்கள் மறுக்கப்படும். இது அனுமதிக்கப்படாது” என்று தெளிவாக கூறியுள்ளது.

இந்த அறிவிப்பு காரணமாக, அமெரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ள பலர் தற்போது கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Summary :

The US has reiterated that tourist visa applications will be denied if officials believe the purpose of travel is childbirth to obtain US citizenship.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *