அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறப்பித்த அதிமுக்கிய உத்தரவை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது விதிக்கப்பட்ட வரிகள் சட்டவிரோதமானவை என்ற நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து, டிரம்ப் நிர்வாகம் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுவரும் போரை ஆதரிக்கும் விதமாக இந்தியாவானது ராஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக குற்றம் சாட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதித்தார்.
இதேபோல், சீனா, பிரேசில், மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீதும் டிரம்ப் நிர்வாகம் வரிகளை அதிகரித்துள்ளது. இதை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டபோது, அதை விசாரித்த நீதிபதி, அவசரகால அதிகாரச் சட்டங்களைப் பயன்படுத்தி டிரம்ப் வரிகளை உயர்த்தியது சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூழ்நிலையில், நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க அரசு உச்ச நீதிமன்றத்தில் டிரம்ப் நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மனுவில், அமெரிக்கா விதித்த வரி மிகையானது அல்ல என்றும், இது உக்ரைனில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்க அரசாங்கம் எடுத்துள்ள பொருளாதார நடவடிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசரமாக விசாரிக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளார்.