தமிழ்நாட்டில் வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா கொண்டாடப்படாதது வருத்தமளிக்கிறது – வானதி சீனிவாசன்

188.jpg

கோவை:
தமிழ்நாட்டில் வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவு விழா மாநில அளவில் கொண்டாடப்படாதது வருத்தமளிக்கிறது என்று பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி மற்றும் கோவை எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சுதந்திரப் போராட்டத்தில் மிகப்பெரிய பங்கெடுத்த தமிழ்நாட்டில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் அரசுத் தரப்பில் கவனிக்கப்படாதது கவலை அளிக்கிறது,” என்றார்.

தீவிர வாக்காளர் திருத்தப் பணியில் அதிகாரிகள் வழியாக தி.மு.க உறுப்பினர்கள் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்வது தவறு என்று அவர் குற்றம் சாட்டினார். “தி.மு.க மற்ற கட்சிகளை தட்டிப் பார்க்கலாம் என்று நினைக்கிறது. ஆனால் இதற்கு மக்கள் தக்க பதில் அளிப்பார்கள்,” என எச்சரித்தார்.

அ.தி.மு.க–பா.ஜ.க கூட்டணி விவகாரத்தில் மத்திய தலைமை வழங்கும் வழிகாட்டுதலின் பேரில் தான் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும், அதற்கிணங்க தான் செயல்படுவதாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

அதே நேரத்தில், “தி.மு.க-வை வீழ்த்துவோம் என்று கூறும் த.வெ.க தலைவர் விஜய், அதற்கான திட்டம் ஏதேனும் வைத்திருக்கிறாரா? அதை வெளிப்படையாக கூற வேண்டும்,” என அவர் கேள்வி எழுப்பினார்.

Summary :
BJP’s Vanathi Srinivasan criticizes Tamil Nadu for not celebrating Vande Mataram’s 150th year and challenges Vijay’s anti-DMK stand.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *