ஒரு ஜெர்மன் படத்தை பார்த்து தூக்கமே போன வெற்றிமாறன், இருபது ஆண்டுகளுக்கு பின்னர் தனது படத்தின் மூலம் அந்த இயக்குநரையே அதே நிலைக்கு ஆளாக்கியுள்ளார்.

இதைப் பற்றிக் கூறிய வெற்றிமாறன், “நான் உதவி இயக்குநராக இருந்தபோது ‘அக்வையர், த ராத் ஆஃப் காட்’ என்ற ஜெர்மன் இயக்குநர் வெர்னர் ஹெர்சாக் (Werner Herzog) அவர்களின் படத்தை பார்த்தேன். அந்த இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. பல நாட்கள் அந்த படத்தைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன்,” என்று தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறியதாவது:
“சில ஆண்டுகள் கழித்து நான் இயக்கிய விசாரணை படம் ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டபோது, வெளிநாட்டு மொழி திரைப்படங்களுக்கு வாக்களிக்கும் உறுப்பினராக இருந்தவர் ஹெர்சாக். அப்போது அவர் படத்தை முழுவதும் பார்த்துவிட்டு, ‘இன்றிரவு எனக்கும் தூக்கம் வராது’ என்று கூறினார். அதைக் கேட்டு நான் உண்மையிலே நெகிழ்ந்தேன். இருபது ஆண்டுகளுக்கு முன்பு அவரது படத்தைக் கண்டு நான் தூங்கவில்லை; இன்று அவர் எனது படத்தைக் கண்டு தூங்கவில்லை,” என வெற்றிமாறன் சிரிப்புடன் பகிர்ந்துகொண்டார்.”
2007-ல் பொல்லாதவன் மூலம் இயக்குநராக அறிமுகமான வெற்றிமாறன், பின்னர் ஆடுகளம் படத்தால் தேசிய விருதை பெற்றார். 2016-ல் வெளியான விசாரணை படம் காவல்துறை விசாரணையின் உண்மை முகத்தைக் காட்டி பரவலான பாராட்டையும் தேசிய விருதையும் பெற்றது.
Summary :
Vetrimaaran recalls how German director Werner Herzog’s film once inspired him—and how “Visaranai” left Herzog sleepless 20 years later.









