விஜயின் புதிய வார்ரூம்: பூத் கமிட்டி முதல் மண்டல பொறுப்பாளர் வரை நேரடி கண்காணிப்பு

0205.jpg

வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கட்சியின் தேர்தல் பணிகளை வேகப்படுத்தி வருகிறார். அதற்காக, கட்சியின் அனைத்து நிலை பணிகளையும் ஒருங்கிணைத்து கண்காணிக்க ஒரு புதிய ‘வார்ரூம்’ (War Room) உருவாக்கப்பட்டுள்ளது.

சுமார் 80 பணியாளர்கள் பணிபுரியும் இந்த வார்ரூம், விஜயின் நேரடி பார்வையில் இயங்குகிறது. மாவட்டச் செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள், மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களின் செயல்பாடுகள் அனைத்தும் இங்கு கண்காணிக்கப்படும்.

மேலும், ஒவ்வொரு உறுப்பினரின் தினசரி பணிகளை பதிவு செய்யும் வகையில் ஒரு மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம், மாவட்ட மற்றும் மண்டலத் தலைவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உடனுக்குடன் வார்ரூமில் பதிவாகின்றன.

கட்சி வட்டாரங்களின் தகவலின்படி, கடந்த 15 நாட்களாகவே இந்த வார்ரூம் செயல்பட்டு வருவதோடு, 2026 தேர்தல் முடியும் வரை முழு வீச்சில் இயங்கவுள்ளது.

கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை – ஆதாரங்களை ஒப்படைத்த தமிழக வெற்றிக் கழகம்

இதற்கிடையில், கரூரில் நடந்த கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ளது. கடந்த மாதம் 17ஆம் தேதி முதல் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிபிஐ, விஜய் பிரச்சார வாகனத்தின் சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோ ஆதாரங்களை கோரிய நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் குழு இன்று (நவம்பர் 8) கரூர் சிபிஐ அலுவலகத்தில் தேவையான வீடியோக்கள் மற்றும் ஆவணங்களை ஒப்படைத்துள்ளது.

இதன் மூலம், கரூர் வழக்கில் அடுத்த கட்ட விசாரணை வேகமெடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Summary :

Actor Vijay’s party launches a war room to track election works across Tamil Nadu. CBI probes Karur case as TVK submits key evidence.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *