தீபாவளி கொண்டாட்டம் ரத்து: கரூர் துயரத்தில் த.வெ.க. அறிவிப்பு – விஜயின் உத்தரவு

0069.jpg

கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் நினைவாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) சார்பில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை யாரும் கொண்டாட வேண்டாம் என கட்சி தலைவர் விஜயின் உத்தரவின் பேரில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 27 அன்று கரூரில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, கட்சியின் சில நிர்வாகிகள்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சிலர் கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் நடந்த நாளிலிருந்து கட்சி தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களை இன்னும் நேரில் சந்திக்காத நிலையில், கட்சி தலைமையகம் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் சிறப்பு உத்தரவு வழங்கியுள்ளது.

த.வெ.க. பொதுச் செயலாளர் என். ஆனந்த் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில்,

“கரூரில் நிகழ்ந்த துயரச்சம்பவத்தில் உயிரிழந்த நம் சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தலைவர் விஜயின் அறிவுறுத்தலின்படி இந்த ஆண்டு யாரும் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன், விஜய் ஆயுத பூஜை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதால் விமர்சனங்கள் எழுந்திருந்தன. அந்த எதிர்ப்புகளுக்குப் பிறகே இப்போது கட்சி அதிகாரப்பூர்வமாக தீபாவளி கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் வரும் அக்டோபர் 20-ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில், கரூர் துயரத்தின் நினைவாக த.வெ.க. இந்த முடிவை எடுத்துள்ளது.

Summary:

After the Karur public meeting tragedy that claimed 41 lives, Vijay-led TVK announced no Diwali celebrations this year as a mark of respect.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *