விஜயின் பாதுகாப்பில் குளறுபடி – மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் பாதுகாப்பு குளறுபடி பற்றி,
மத்திய ரிசர்வ் போலீஸ் படை ( CRPF ) , அதிகாரிகளிடம், மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.
TVK , தலைவர் விஜய்க்கு, மத்திய அரசு, ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது.மத்திய ரிசர்வ் போலீஸ் படை ( CRPF ) , வீரர்கள் 11 பேர், 24 மணி நேரமும் விஜயின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்பை மீறி, சென்னை, நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள விஜய் வீட்டிற்குள், சில தினங்களுக்கு முன்,
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தைச் சேர்ந்த மனநலம் பாதித்த அருண், 24 என்பவர் புகுந்தார்.
இது, விஜய் வீட்டில் பாதுகாப்பு இல்லாமல் குளறுபடி இருப்பதை அம்பலப்படுத்தியது.
ஆனால் சமீபத்தில் விஜயின் பாதுகாப்பில் சிறிய குளறுபடி ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தீவிர கவனம் செலுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து, சி.ஆர்.பி.எப் அதிகாரிகளிடம் முழுமையான அறிக்கையை அமைச்சகம் உறுதி படுத்தி உள்ளது .
விஜயின் அரசியல் நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், அவருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் கூடும் வாய்ப்பு இருப்பதால், பாதுகாப்பில் சலுகை எதுவும் விடப்படக்கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், கடந்த செப்., 27ல், கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில், நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் பலியாகினர்.
விஜய் மீதும் செருப்பு வீசப்பட்டதாக வீடியோ வெளியாகி உள்ளது. இக்கூட்டத்திலும் பாதுகாப்பு குளறுபடிகள் இருந்துள்ளன.
தொடர்ந்து, விஜய்க்கான பாதுகாப்பு பணியில் குளறுபடிகள் நீடிப்பதால், அது பற்றி அறிக்கை தாக்கல் செய்யுமாறு,
மத்திய ரிசர்வ் போலீஸ் படை CRPF ., அதிகாரிகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சி.ஆர்.பி.எப்., வீரர்களிடம், டில்லியில் இருந்து சென்னை வந்த உள்துறை அமைச்சக அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.
Summary: The Union Home Ministry has raised concern over repeated lapses in the security of TVK leader Vijay, who is under ‘Y’ category protection with 11 CRPF personnel. A report has been sought from CRPF after incidents at his residence and recent public events exposed serious security gaps.