பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் 27-ஆம் நாளுக்கான ப்ரொமோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த சீசனில் திரைபிரபலர்களைவிட சமூக வலைதள பிரபலர்களே அதிகம் கலந்து கொண்டதால் பார்வையாளர்களிடையே கலவையான எதிர்வினைகள் எழுந்துள்ளன. எதற்கும் சண்டை, வாதம் என பிக்பாஸ் வீடு பரபரப்பாகி வருகிறது.
நேற்றைய எபிசோடில் போட்டியாளர்கள் 90’s கிட்ஸ் விளையாட்டுகளில் கலந்து கொண்டது ரசிகர்களுக்கு ஒரு லேசான மாற்றத்தை ஏற்படுத்தியது. இதேவேளை, அடுத்த எலிமினேஷனில் வி.ஜே. பார்வதி வெளியேறுவார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ், அமித் ஆகியோர் வைல்டு கார்டாக வீட்டிற்குள் நுழைய உள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் 27-ஆம் நாள் ப்ரொமோவில் நடிகர் விஜய் சேதுபதி போட்டியாளர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.
“எதுக்கு இவ்வளவு சத்தம்? பேசினா புரியுமா? கத்துனா தான் புரியுமா?” என்று கேட்டார். மேலும், திவாகரிடம் “நீங்க யாரு சார் இன்னொருவரின் தகுதி, தராதரம் பற்றி பேச?” என்று சாடியுள்ளார்.
விஜய் சேதுபதியின் இந்த கூர்மையான விமர்சனம் பிக்பாஸ் ரசிகர்களிடையே தீவிரமாக பேசப்படுகிறது.
Summary :
In the viral Bigg Boss 9 promo, Vijay Sethupathi questions contestants’ attitude and warns them against judging others’ standards.








