Vijay vs Power Star-விஜய் vs பவர் ஸ்டார்: 2026 தேர்தல்!”

Vijay vs Power Star

விஜயை எதிர்த்துப் போட்டி’ அதிரடியாக அறிவித்தார் பிரபல நடிகர்..! – Vijay vs Power Star

HRWF பவுண்டேஷன் தமிழ் புத்தாண்டுக்கு “மகுடம்” விருதுகள் 2025 வழங்கும் விழா சென்னையில் நடத்தியது.

தொழில் முனைவோர், தொண்டு நிறுவனங்கள், கலைஞர்கள், காவல்துறை அதிகாரிகள், சின்னத்திரை, சினிமா பிரபலங்கள், ஊடகத்தினர் உட்பட பலர் விருது பெற்றனர்.

ரேகா, பவர் ஸ்டார், டெலிபோன் ராஜ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விருது வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் பவர் ஸ்டார் : 

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுவதற்குப் பெரிய கட்சிகள் என்னை அழைத்திருக்கின்றன. நான் நடிகர் விஜய்க்கு எதிராகத்தான் போட்டியிடுவேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டேன். அவருக்கு நான் ஆதரவு தெரிவிப்பேன் என்று கூற முடியாது; காலப்போக்கில் அது தெரியவரும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர், பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஒரு நல்ல மனிதர், பண்பானவர். அவர் கட்சியை நன்றாக வலுப்படுத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது, என்றார்.

பவர் ஸ்டாரின் பலம்

சினிமாவில் பல்வேறு நடிகர்கள் இருந்தாலும், திரையில் நகைச்சுவையிலும் நிஜ வாழ்க்கையிலும் நகைச்சுவையாகப் பேசும் திறமை கொண்டவர் பவர் ஸ்டார்.

எப்போதும் சிரித்த முகத்துடன் பற்களைக் காட்டி மகிழ்ச்சியாக இருக்கும் அவர், விஜய்க்கு எதிராக எந்த பலத்தைக் கொண்டு போட்டியிடுவார் என்ற கேள்வி எழலாம்.

இருப்பினும், அவரைப் பயன்படுத்தி விஜயை விமர்சிக்க வைக்கப் பல கட்சிகளும் முயன்று வருவதாக அவரே கூறியுள்ளார்.

விஜய் ரசிகர்களின் எதிர்வினை

விஜய், தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்ட நடிகர். அவரது ரசிகர்கள், பவர் ஸ்டாரின் இந்த அறிவிப்பை எப்படி எதிர்கொள்வார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

விஜய்யின் அரசியல் நுழைவு ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பவர் ஸ்டாரின் போட்டி அதை மேலும் சூடுபிடிக்கச் செய்யும். சமூக வலைத்தளங்களில் இரு நடிகர்களின் ரசிகர்கள் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

Summary : Vijay vs Power Star

Actor Power Star Srinivasan announces his intention to contest against actor Vijay in the 2026 Tamil Nadu elections, creating political buzz.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *