புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்குப் பிறகு, தன் X பக்கத்தில் வலுவான அறிக்கையை வெளியிட்டுள்ள விஜய், திமுக அரசை நேரடியாக விமர்சித்து கடும் எச்சரிக்கையை முன்வைத்துள்ளார்.

புதுச்சேரி அரசு, கட்சி பேதமின்றி அவரது அரசியல் நிகழ்வுக்கு வழங்கிய ஒத்துழைப்பை அவர் பாராட்டியுள்ளார். இதுகுறித்து விஜய் கூறியதாவது:
“எல்லைகள் வேறானாலும், மொழியாலும் மனதாலும் எப்போதும் ஒருங்கிணைந்திருக்கும் நாம், இன்று புதுச்சேரி மண்ணில் ஒரு புதிய அரசியல் வரலாற்றின் அத்தியாயத்தை தொடங்கியிருக்கிறோம். நிர்வாக ரீதியாக சிறிய யூனியன் பிரதேசமாக இருந்தாலும், நம் நிகழ்வுக்கு அரசாங்கம் அளித்த ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது. நமது பாதுகாப்பிலும், பொதுமக்கள் பாதுகாப்பிலும் ஜனநாயக அரசியல் மாண்போடு நடந்துகொண்ட புதுச்சேரி அரசு, முதல்வர், உள்துறை அமைச்சர், பொதுப்பணித் துறை அமைச்சர் மற்றும் மாநிலக் காவல்துறைக்கு மனப்பூர்வ நன்றியை தெரிவிக்கிறோம்.”
அதே நேரத்தில், தமிழக திமுக அரசை கடும் முறையில் விமர்சித்த அவர்,
“அதிகாரத்தை வைத்துக்கொண்டு சட்டத்தை வளைத்து, சூழ்ச்சிகள் செய்து, நம் அரசியல் பயணம், மக்கள் சந்திப்பு, பிரசார முன்னெடுப்புகளை தடுக்க திமுக அரசு பல திட்டங்கள் போட்டாலும், முடக்க முயன்றாலும் – அது ஒரு அணுவளவும் நடக்காது. எழுச்சி மிக்க நம் இளைஞர் படை கட்டுக்கோப்பும் பொறுப்பும் மிக்கவர்கள் என்பதை அவதூறாளர்கள் உணர்ந்திருக்க வேண்டும்,” என்றும் தீவிரமாக எச்சரித்துள்ளார்.
Summary :
Vijay warns the DMK government cannot stop his political outreach through legal pressure or tactics, while praising Puducherry’s support for his public gathering.









