விஜயின் கடும் எச்சரிக்கை: “இப்படி பண்ணிட்டீங்களே!” – புஸ்ஸி, ஜானை கண்டித்தார் தலைவர்

0146.jpg

சென்னை:
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஜான் ஆரோக்கியசாமியை கடுமையாக கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் இருவரையும் தனித்தனியாக அழைத்து பேசிய விஜய், கட்சியின் நிலைமை குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தார்.

புஸ்ஸி ஆனந்திடம் அவர், “கூட்டங்கள் நடத்துவது தவிர நீங்கள் என்ன செய்தீர்கள்? நிர்வாகப் பொறுப்புகள் பல காலியாக உள்ளன. நீண்ட காலம் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பொறுப்பே இல்லை. ஒரு வழக்கு வந்ததும் நீங்கள் காணாமல் போய்விட்டீர்கள். நான் வீட்டிலேயே இருந்தேன், ஆனால் நீங்கள் தலைமறைவானீர்கள் — இது பொதுச்செயலாளருக்கேற்ப நடந்துகொள்ளும் முறைதானா?” என்று கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், ஜான் ஆரோக்கியசாமியிடமும் விஜய் கடும் கோபம் தெரிவித்துள்ளார். “நீங்கள் தவறான ஆலோசனைகளை வழங்கியுள்ளீர்கள். கரூரில் கூட்டம் நடத்தும் யோசனை, அங்கு தாமதமாகச் செல்லச் சொன்னது, பின்னர் உடனே கிளம்பச் சொன்னது — இவை எல்லாம் உங்கள் தவறான வழிகாட்டுதலால் தான். இந்த முடிவுகளால் கட்சியின் நடவடிக்கைகள் சிதைந்துவிட்டன,” என்று அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

உட்கட்சி மோதல் தீவிரம்

இதனுடன், தமிழக வெற்றிக் கழகத்தில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆதரவாளர்களுக்கிடையில் கடுமையான உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. இரு தரப்பினரும் சமூக ஊடகங்களில் ஒருவரை ஒருவர் விமர்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.

கட்சிக்குள் கடந்த சில வாரங்களாகவே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாகவும், குறிப்பாக கரூர் சம்பவத்திற்குப் பிறகு இவை வெளிப்படையாக மோதலாக மாறியுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Summary :
Vijay reportedly rebuked TVK leaders Pussee Anand and John Arokiasamy over mismanagement and rising internal clashes within Tamilaga Vettri Kazhagam.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *