நாட்டிலேயே இது தான் விலை கம்மி? முதல் பந்திலேயே சிக்சர் அடிக்கும் Vifast VF3
வியட்நாம் நாட்டைச் சேர்ந்த மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட், இந்திய சந்தையில் தனது முதல் சிறிய ரக எலக்ட்ரிக் காரான VF3ஐ அறிமுகப்படுத்த ஆயத்தமாகி வருகிறது.
ஏற்கனவே இந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த கார், இந்தியாவில் MG Comet EVக்கு நேரடி போட்டியாக களமிறங்க உள்ளது.
உள்நாட்டு நிறுவனங்களைத் தொடர்ந்து வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனமும் தனது புதிய மலிவு விலை எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் VF3 மூலம் இந்திய சந்தையில் களம் இறங்க உள்ளது. ஏற்கனவே இந்த பிரிவில் உள்ள MG Comet EV-க்கு இது சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நகரச் சாலைகளின் ராஜாங்கத்திற்கு ஏற்றார்போல் வடிவமைக்கப்பட்டிருக்கும் VinFast VF3 எலக்ட்ரிக் கார், 18.64 kWh பேட்டரியுடன் வருகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 215 கிமீ வரை பயணிக்கக்கூடிய இந்த 4-சீட்டர் ஹேட்ச்பேக், வெறும் 5.3 வினாடிகளில் 0-50 கிமீ வேகத்தை எட்டி அசத்துகிறது.
இரண்டு கதவுகள் மற்றும் கச்சிதமான வடிவமைப்பைக் கொண்டுள்ள இதன் முன்புறம் V-வடிவ கிரில் மற்றும் குரோம் வேலைப்பாடுகளுடன் கவர்ச்சியாக உள்ளது. கருப்பு நிற தூண்களுடன் கூடிய மிதக்கும் கூரை இதன் தோற்றத்திற்கு மேலும் அழகு சேர்க்கிறது.
VinFast நிறுவனம் தனது புதிய VF3 மின்சார காரை சுமார் ₹10 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்த உள்ளது. இது, ஏற்கனவே விற்பனையில் உள்ள MG Comet EVயின் ₹7 லட்சம் ஆரம்ப விலையை விட சற்று அதிகமாகும். மேலும், MG Comet EVஐ பேட்டரி வாடகை திட்டத்தின் கீழ் ₹4.99 லட்சம் ஆரம்ப விலையில் பெறும் வாய்ப்பும் உள்ளது.
Summary:Vietnamese electric car manufacturer VinFast is set to launch its first compact electric car, the VF3, in the Indian market. Showcased at the Auto Expo, the VF3 with an 18.64 kWh battery offering a 215 km range and a 0-50 kmph acceleration in 5.3 seconds, is poised to compete directly with the MG Comet EV, with an expected starting price of around ₹10 lakh.