வக்ஃப் சட்ட திருத்தத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை : Waqf Act
வக்ஃப் என்றால் என்ன?
வக்ஃப் (Waqf) என்பது இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில், ஒருவர் தன் சொத்துகளை நிலையான நலத்திட்டத்திற்கு (charity) அர்ப்பணிக்கும் ஒரு வழிமுறை.
வக்ஃபின் முக்கிய அம்சங்கள்:
வழங்கப்படும் சொத்து நிலையாக வழங்கப்பட வேண்டும் – அதைப் பிறகு விற்க முடியாது, கொடுக்க முடியாது.
எனவே சொத்திலிருந்து வரும் வருமானம் மூலமாக மத அல்லது பொது நலத்திட்டங்களுக்கு பயன்பட வேண்டும்.
வக்ஃப் :
Waqf Act-உச்ச நீதிமன்றம் அதிரடியாக வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு தற்காலிக தடை விதித்துள்ளது.
இதனால் வக்ஃப் சொத்துகள் என்று அறிவிக்கப்பட்டவற்றில் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது.
திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் புதிய உறுப்பினர்களை நியமிப்பதற்கும் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வக்ஃப் மற்றும் சட்டத் திருத்த மசோதா 2025 ஏப்ரல் 4ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, அமர்வுக்குழு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது,
விசாரணையின்போது, வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு தற்காலிகமாக தடை விதிக்க நீதிமன்றம் பரிசீலிப்பதாக தெரிவித்தது.
இச்சட்டம் அரசியலமைப்புக்கு முரணானது என்றும், முஸ்லிம்களின் சொத்துக்களை அபகரிக்கும் முயற்சி.
நீதிமன்றத்தின் தற்காலிக தடை மற்றும் அடுத்த கட்டம் :
உச்ச நீதிமன்றம் இந்த சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்திருப்பது, இந்த விவகாரத்தின் தீவிரத்தையும், சட்டப்பூர்வமான சவால்களையும் உணர்த்துகிறது.
தற்போதைய நிலையில், இந்தத் தடை காரணமாக வக்ஃப் சொத்துக்கள் தொடர்பான எந்த புதிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது.
நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு இந்த சட்டத்தின் எதிர்காலத்தையும், வக்ஃப் சொத்துக்களின் நிர்வாகத்தையும் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்
Summary : Waqf Act
In a significant development, the Supreme Court has temporarily halted the implementation of the recently enacted Waqf Amendment Act.
This stay prevents any actions concerning Waqf-declared properties and prohibits the appointment of new Waqf Board members under the new legislation, maintaining the current situation.