நடிகர் சிவகார்த்திகேயன், தனது ஆரம்பகாலத்தில் எதிர்கொண்ட அனுபவங்கள் மற்றும் வெறுப்பாளர்களின் எண்ணங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார்.
சினிமா பயணத்தின் ஆரம்பத்தில் வந்த தடைகள்
சமீபத்திய நேர்காணலின் போது, சினிமா துறையில் தனது வளர்ச்சியை விரும்பாதவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதையும், அதற்கான தனது எதிர்வினைகளையும் அவர் தெளிவாக எடுத்துரைத்தார்.
”நேருக்கு நேர் கேள்விகள்”: சிலர் அவரது முகத்துக்கு நேராகவே,
“நீ இங்க என்ன பண்ற?”
“உனக்கும் சினிமாவுக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டார்களாம்.
அந்த நேரங்களில் சிரித்துக்கொண்டு, பதில் சொல்லாமல் அவர் தன் பணியை தொடர்ந்ததாக சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.
மனநிலையைப் பற்றி சிவகார்த்திகேயனின் பார்வை
“சிலர் மட்டுமே ஒரு சாதாரண மனிதன் வெளியிலிருந்து வந்து முன்னேறுவதை விரும்புகிறார்கள். ஆனால், பலருக்கு அது பொறுப்பதில்லை.
அவர்கள் இவன் எப்படி முன்னேறுகிறான் என்பதில் ஆச்சரியமாகவும், வெறுப்பாகவும் இருக்கிறார்கள்,” என்று குறிப்பிட்டார்.
வெற்றியையே பதிலடியாக மாற்றிய சிவகார்த்திகேயன்
“அவர்களுக்கு பதிலடி கொடுப்பது எனது நோக்கமல்ல.
என் முன்னேற்றம் அவர்களுக்கு பதிலடி கிடையாது.
இது என்னை நேசிக்கும் ரசிகர்களுக்கும், சாதாரண பின்னணியில் இருந்து பெரிய கனவோடு சினிமா துறையில் வளர ஆவலாக இருக்கும் அனைவருக்குமானது,” என்று உருக்கமாகப் பேசினார்.
அமரன் திரைப்படம் மற்றும் எதிர்பார்ப்புகள்
சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் வெளியான “அமரன்”
மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியான இந்த படம், ரூ.333 கோடி வசூலித்து சாதனை படைத்தது.தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். எதிர்காலத்தில் அவரது படங்கள் மட்டுமின்றி, அவரது வெற்றியும் பலருக்கு மூத்தனமாகவும், ஊக்கமாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.