காலை எழுந்ததும், பலருக்கு Coffee, Tea, அல்லது Mobile தான் முதலில் நினைவுக்கு வரும்.
ஆனா, நம் உடலுக்குத் தேவையான முதல் விஷயம் — தண்ணீர். ஒரு நல்ல நாளின் ஆரம்பம் தண்ணீர் குடிப்பதிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என்பதைக் பலர் கூறுகிறார்கள்.
ஆனா கேள்வி என்னனா!
வெறும் வயிற்றில் எந்த தண்ணீர் குடிக்கணும்? சூடா? குளிரா? வெந்நீரா? எது உடம்புக்கு நல்லது?
அதான் இன்று நம்ம இதைப் பத்தி சின்னதா- சுவாரஸ்யமா பேசுவோமா .
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டியது ஏன்?
நம் உடல் இரவில் 6-8 மணி நேரம் வரை எதையும் எடுத்துக்கொள்ளாமல் இருக்கும். அந்த நேரத்தில் Dehydration என்ற நிலை உருவாகும். அதனால், காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதால் நம் உடலின் temperature-ஐ balance பண்ணுவும் ,
-
Metabolism process-ஐ ஸ்டார்ட் பண்ண வைக்கும்
-
Toxins-ஐ வெளியேற்ற, digestion-ஐ மேம்படுத்தவும் உதவுகின்றது.
இது போன்ற simple habit தான்,உங்க body-க்கு பெரிய பயன் தரும்.
எவ்வளவு தண்ணீர் குடிக்கணும்:
பலர் சொல்லுவார்கள் “ஒரே நேரத்துல 1 லிட்டர் தண்ணி குடிங்க” என்று ஆனால் அது எல்லாருக்கும் பொருந்தாது.
சரியான அளவு — 250 ml முதல் 500 ml வரை (அதாவது ஒரு டம்ளர் முதல் இரண்டு டம்ளர் வரை).
அதுக்கும் மேல கஷ்டப்பட்டு குடிச்ச , அது body-க்கு stress-தா தரும். அதனால் Slow -வா குடிங்க – sip பண்ணிக்கிட்டே குடிங்க.
எந்த தண்ணீய குடிக்கலாம்?
1. வெந்நீர் (Warm Water):
இது தான் அதிகமாக பரிந்துரைக்கப்படும். சிறிது வெந்நீரை வெறும் வயிற்றில் குடிப்பதால்
-
Digestion-ஐ தூண்டும்
-
கொழுப்பு கரைய உதவும்
-
Skin glow-க்கு support பண்ணும்
-
Constipation குறைக்கும்
சில Members lemon juice சேர்த்து warm water குடிப்பாங்க. அதுவும் நல்லது, ஆனா தினமும் lemon சேர்க்க வேண்டாம் – Acidity பிரச்சனை கூட ஏற்படலாம்.
2. சாதாரண தண்ணீர் (Room Temperature Water):
சூடா இல்லாமல், குளிரா இல்லாமல் — இதுதான் Neutral option. இது அனைத்து வகை உடலுக்கும் பொருந்தும்.
சிறப்பாக summer காலங்களில் இதுதான் சிறந்தது.
3. வெந்நீர் + தேன் (Warm Water with Honey):
இந்த combination metabolism-ஐ வேகமாக்கும். மாலை நேரம் அல்லது காலையில் இதை குடித்தால் energy boost தரும். ஆனா diabetics உள்ளவங்க Honey கண்டிப்பா avoid பண்ணணும்.
4. வெந்நீர் + மஞ்சள் (Turmeric Water):
Natural detox drink மாதிரி. மஞ்சள் anti-inflammatory, antibacterial property கொண்டது. வெறும் வயிற்றில் குடித்தால் immune system-ஐ சுத்தப்படுத்தும்.
5. Copper Water ( Copper பாத்திர தண்ணீர்):
இது பழைய காலத்திலிருந்தே பயன்பாட்டில் இருந்த ஒரு பழக்கம். Copper பாத்திரத்தில் இரவெல்லாம் வைக்கப்பட்ட தண்ணீய காலையில் குடித்தால், அது Antibacterial effect-ஐ தரும், digestion-க்கு உதவும். ஆனா, copper bottle-ஐ சுத்தம் பண்ணுவது மிக மிக முக்கியம்.
என்ன குடிக்க கூடாது?
காலை எழுந்தவுடனே Coffee அல்லது Tea குடிக்கிற பழக்கம் பலருக்கும் உண்டு. ஆனா அது சிறந்த Option இல்லை. அது acidity-ஐ தூண்டும், dehydration -ன அதிகரிக்கும்.
அதேபோல் குளிர்ந்த Refrigerator water avoid பண்ணணும். அது stomach muscles-ஐ contract பண்ணி digestion-ஐ slow ஆக்கும்.
சிறந்த பழக்கம்- Morning Water Routine
- எழுந்ததும் முதலில் 1–2 glass தண்ணீர் குடிக்கவும்
- 10 நிமிஷம் gap விட்டு brush செய்யவும் (natural saliva digestionக்கு உதவும்)
- அதற்குப் பிறகு tea அல்லது coffee குடிக்கலாம்
- சாப்பாட்டிற்கு முன் 30 நிமிஷம் தண்ணீர் குடிக்க வேண்டாம்
- இந்த simple routine follow பண்ணினா, metabolism-ம், skin glow-ம், energy-யும் மேம்படும்.
இதன் நன்மைகள் (Benefits Recap):
- Dehydration குறையும்
- Skin glow மற்றும் freshness
- Fat burning support
- Digestion system strong
- Immunity improvement
- Toxins elimination
அதாவது, ஒரு simple glass of water – but a full body reset!
“வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது” — இது ஒரு பழைய health tip தான். ஆனா இன்றைய வேகமான வாழ்க்கைல இதை follow பண்ணுவது ஒரு சின்ன discipline மாதிரி. ஒரு நாள் இரண்டு நிமிஷம் எடுத்தாலும், நம் உடல் அதற்குப் பல மடங்கு Thanks சொல்லும்.
Summary:
Drinking water first thing in the morning helps detoxify your body, improve metabolism, and boost energy. But what kind of water is best — warm, room temperature, or copper? Learn how each type benefits your body and builds a refreshing start to your day.