வாட்ஸ்அப் மூலம் வணிக நிறுவனங்களிடமிருந்து வரும் ஸ்பேம் மெசேஜ் தொல்லையை குறைக்க, மெட்டா நிறுவனம் புதிய “மெசேஜிங் லிமிட்” அம்சத்தை அறிமுகப்படுத்தி சோதனை செய்து வருகிறது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் வாட்ஸ்அப், சமீப ஆண்டுகளில் ‘சமூகங்கள்’ (Communities) மற்றும் வணிக அம்சங்கள் சேர்த்ததால் விளம்பரச் செய்திகளும் அறிவிப்புகளும் அதிகரித்து விட்டன. இதனால் பயனர்கள் அடிக்கடி தேவையற்ற மெசேஜ்களால் சிரமப்படுகிறார்கள்.
இந்த பிரச்சினையை சமாளிக்க, மெட்டா நிறுவனம் ஒரு புதிய கட்டுப்பாட்டு வரம்பை (Messaging Limit) சோதனை செய்யத் தொடங்கியுள்ளது.
புதிய விதிமுறை என்ன?
அறியாத நபர்களுக்கு (Unknown Recipients) வணிகங்கள் அல்லது தனிநபர்கள் அனுப்பும் மெசேஜ்களின் எண்ணிக்கை இப்போது ஒரு வரம்புக்குள் கட்டுப்படுத்தப்படும்.
பயனர் பதிலளிக்கும் வரை அனுப்பப்படும் அனைத்து மெசேஜ்களும் அந்த லிமிட்டில் சேர்க்கப்படும். உதாரணமாக, ஒரே நபருக்கு தொடர்ந்து மூன்று மெசேஜ் அனுப்பினால், அவை மூன்றும் கணக்கில் சேர்க்கப்படும்.
மெசேஜ் அனுப்பும் வரம்பை நெருங்கும் போது, வாட்ஸ்அப் எச்சரிக்கை காட்டும்; அதன் பிறகு மேலும் மெசேஜ் அனுப்ப இயலாது.
யாருக்கு பொருந்தும்?
இந்த அம்சம் சாதாரண பயனர்களுக்கல்ல. தினமும் அதிக அளவு விளம்பர அல்லது ஸ்பேம் மெசேஜ் அனுப்பும் வணிக நிறுவனங்கள் மற்றும் சில தனிநபர்கள் மீது மட்டுமே இந்த கட்டுப்பாடு பொருந்தும்.
டெக்க்ரஞ்ச் வெளியிட்ட தகவலின்படி, இந்த புதிய லிமிட் விரைவில் பல நாடுகளில் சோதனை செய்யப்படும்.
இதற்கு முன்னரும், மெட்டா நிறுவனம் வணிகங்களுக்கான Broadcast மெசேஜ் எண்ணிக்கைக்கு வரம்பை விதித்திருந்தது. இப்போது, “மெசேஜிங் லிமிட்” மூலம் ஸ்பேம் தொல்லையை மேலும் குறைக்க வாட்ஸ்அப் முயற்சி செய்கிறது.
Summary :
Meta introduces a new WhatsApp message limit to restrict spam from businesses and unknown users, aiming to make chats cleaner and safer.









