உஷார் : வாட்ஸ்அப்பில் தெரியாத நம்பர்லிருந்து போட்டோ வந்தா மொத்த பணமும் காலி! பாதுகாப்பாக இருப்பது எப்படி?
உஷார் மக்களே! வாட்ஸ்அப்பில் புது மோசடி! தெரியாத நம்பர்ல இருந்து போட்டோ வந்தா டவுன்லோட் பண்ணாதீங்க. ஜபல்பூர்ல ஒருத்தரு போட்டோவ டவுன்லோட் பண்ணி ₹2 லட்சத்துக்கு மேல இழந்துட்டாரு.
சமீபத்திய சைபர் மோசடிகள்ல இது புது டெக்னிக். வழக்கமா ஓடிபி, தப்பான லிங்க், டிஜிட்டல் அரெஸ்ட்னு பயமுறுத்துவாங்க. ஆனா இப்ப போட்டோக்குள்ள ஒளிஞ்சிருக்கற லிங்க் மூலமா உங்க போனுக்குள்ள ஈஸியா வந்துடுறாங்க.
சமீபத்திய வாட்ஸ்அப் மோசடி! மோசடிக்காரர்கள் வாட்ஸ்அப் அல்லது பிற செய்தி செயலிகள் மூலம் படங்கள் அனுப்புறாங்க. சில சமயம், படத்துல இருக்கறவங்க யாருன்னு கேப்பாங்க.
நீங்க அந்த போட்டோவை டவுன்லோட் பண்ணினா உங்க போன் ஹேங் ஆகிடும். அப்புறம் மோசடி பண்றவங்களுக்கு உங்க போனுக்குள்ள ஈஸியா வந்துட வழி கிடைச்சிடும்! ஜாக்கிரதையா இருங்க.
சட்டவிரோத மோசடியிலிருந்து பாதுகாப்பாக இருக்க சில குறிப்புகள்:
1.தெரியாத நம்பரிலிருந்து வரும் வாய்ஸ் மெசேஜ், வீடியோ அல்லது போட்டோவை டவுன்லோட் பண்ணாதீங்க.
2.ரொம்ப பெருசா தெரியுற போட்டோ அல்லது வீடியோவை டவுன்லோட் பண்ணாதீங்க, அதுல ஆபத்தான ஆப்ஸ் லிங்க் இருக்கலாம்.
3.உங்க பேங்க் அக்கவுண்ட்டையும் வாட்ஸ்அப் நம்பரையும் வேற வேறயா வச்சுக்கோங்க.
4.இந்த மாதிரி ஏதாவது நடந்தா 1930-க்கு கால் பண்ணி சைபர் கிரைம் வெப்சைட்ல ரிப்போர்ட் பண்ணுங்க.
Summary : A new WhatsApp scam uses photos from unknown numbers to embed malicious links, potentially leading to significant financial loss for users who download them.