பூரி ஜெகந்நாதர் கோயிலின் அதிசயங்கள் – கோபுரத்தின் மீது பறவைகள் ஏன் பறக்காது?

0574.jpg

ஒடிசா மாநிலத்தின் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோயில், அதன் கட்டிடக்கலை மற்றும் ஆன்மிக முக்கியத்துவத்திற்காக பிரசித்தி பெற்றது. இந்த கோயிலின் கோபுரத்தின் மீது எந்த பறவையும் பறக்காது, உட்காராது என்பதும், அதே சமயம் கோபுரத்தின் நிழல் தரையில் படுவதில்லை என்பதும், அறிவியலாளர்களை நீண்ட காலமாக ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

பூரி ஜெகந்நாதர் கோயிலின் வரலாறு

இந்த கோயில் 11ஆம் நூற்றாண்டில் மன்னன் அனந்தவர்மன் சோதகங்க தேவனால் கட்டப்பட்டது. மற்ற இந்து கோயில்களில் காணப்படும் கிராணைட் மற்றும் பளிங்கு சிலைகளுக்கு பதிலாக, இங்கு மூலவராக உள்ள ஜெகந்நாதர், பலராமர் மற்றும் சுபத்திரையின் சிலைகள் புனித வேப்ப மரத்தால் (தாரு பிரமம்) செய்யப்பட்டவை.
ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒரு முறை, இந்த சிலைகள் மறுவுருவாக்கம் செய்யப்படுகின்றன.
உலகிலேயே இது மட்டுமே, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய சிலைகளை நிறுவும் கோயிலாக இருந்து வருகிறது.

கோபுரத்தின் நிழல் – மறைந்த மர்மம்

கோயிலின் கோபுரம் அளவிலா பெரியதாக இருந்தாலும், எந்த நேரத்திலும் அதன் நிழல் தரையில் விழுவதில்லை.
இது கட்டுமான முறைமையா? அல்லது தெய்வீக சக்தியா? என்ற கேள்வி பலரை ஆச்சரியப்படுத்துகிறது.

பறவைகள் கோபுரத்தின் மீது ஏன் பறக்கவில்லை?

பொதுவாக எந்த உயரமான கட்டிடத்தின் மீது பறவைகள் பறக்கும், அமர்வதும் வழக்கமான ஒன்று. ஆனால், பூரி ஜெகந்நாதர் கோயிலின் கோபுரத்தின் மீது இதுவரை எந்த பறவையும் அமரவில்லை என்பது ஒரு வியப்பாகும்.
இதற்கான காரணம் அறிவியலால் இன்னும் முழுமையாக விளக்கப்படவில்லை.

காற்றின் இயக்கத்திற்கு எதிராக பறக்கும் கொடி

பொதுவாக கடலோர பகுதிகளில், காலையில் காற்று கடலிலிருந்து நிலத்தை நோக்கியும், மாலையில் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும்.
ஆனால், பூரி ஜெகந்நாதர் கோயிலில் இதற்கு நேர்மாறாக கொடி எப்போதும் காற்றுக்கு எதிராகவே பறக்கிறது.

கடலின் ஒலி – கோயிலுக்குள் சென்றவுடன் மறையும்

கோயிலின் முதல் படியை தாண்டியவுடன், கடலலைகளின் சத்தம் கேட்டே கிடையாது.
கோயிலுக்கு வெளியே கடல் எழுப்பும் அதிரடி ஒலி, கோயில் பிரகாரத்திற்கு உள்ளே சென்றவுடன் முற்றிலும் அடங்கிவிடும்.

ஆலயத்தில் சமைக்கப்படும் பிரசாதத்தின் அதிசயம்

கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு (மஹாபிரசாதம்), வருடம் முழுவதும் ஒரே அளவாகவே தயாரிக்கப்படுகிறது.
பக்தர்கள் எண்ணிக்கை இருபது லட்சமாக இருந்தாலும், இரண்டு லட்சமாக இருந்தாலும், உணவு எப்போதும் குறைவோ, அதிகமாகவோ இருப்பதில்லை.
இது எப்படி சாத்தியமாகிறது என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.
கோயிலின் மடப்பள்ளியில், உணவு மண் பானைகளில், விறகு அடுப்பில் சமைக்கப்படுகிறது.
ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அடுக்கி வைக்கப்பட்ட ஏழு பானைகளில், மேலே உள்ள பானையிலேயே உணவு முதலில் வெந்து, கீழே உள்ள பானையில் கடைசியாக வெந்துவிடுகிறது.

ரதயாத்திரை – கோயிலின் முக்கிய திருவிழா

பூரி ஜெகந்நாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரதயாத்திரை, உலகப் புகழ்பெற்ற வைணவ திருவிழாக்களில் ஒன்றாகும்.
ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாதம் பவுர்ணமி நாளில் தொடங்கி, 9 நாட்கள் இந்த ரதயாத்திரை கொண்டாடப்படுகிறது.
லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு, இறைவனின் கருணையை பெறுகின்றனர்.
இந்த அதிசயங்களுக்கெல்லாம் அறிவியல் காரணங்கள் இன்னும் முழுமையாக விளக்கப்படவில்லை. ஆனாலும், பூரி ஜெகந்நாதர் கோயில், ஆன்மிக ரீதியாக மட்டுமின்றி, கட்டிடக்கலையிலும், மர்மங்களை உள்ளடக்கிய இடமாகவும் தனித்துவம் பெற்றுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *