மருத்துவ மைக்ரோ புரட்சி! நுண்கருவி, நீண்ட ஆயுள்!

The world's tiniest, biodegradable pacemaker, smaller than a grain of rice, is developed by Northwestern University. It dissolves naturally, avoiding surgery, and is ideal for pediatric cardiac care. World's smallest pacemaker

உலகின் மிகச்சிறிய இதயமுடுக்கி வந்துவிட்டது. இது ஒரு அரிசியின் அளவை விட சிறியது.”

சிரிஞ்ச் ஊசி முனையில் அடங்கும், அரிசி மணியை விட சிறிய, தற்காலிக இதயமுடுக்கியை நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இது உடலில் இயற்கையாக கரையும் தன்மை கொண்டது; கம்பி மற்றும் அறுவை சிகிச்சை தேவையில்லை, குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்றது.

உலகிலேயே மிகச்சிறிய இதயமுடுக்கியை உருவாக்கியுள்ளோம்; குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு இது மிகவும் முக்கியம்,” என்கிறார் ஜான் ஏ. ரோஜர்ஸ். “பிறவிக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைக்குப் பின் தற்காலிக சீராக்கி போதும்;

ஏழு நாட்களில் இதயம் சரியாகிவிடும். இந்தச் சிறிய கருவி அகற்றுவதற்கு மறு அறுவை சிகிச்சை தேவையில்லை,” என்கிறார் இகோர் எஃபிமோவ்.

மார்பில் அணியும் பட்டை ஒழுங்கற்ற இதயத்துடிப்பை கண்டதும், ஒளி மூலம் இதயமுடுக்கியை இயக்கும். ஒளி துடிப்புகள் இதய துடிப்பை கட்டுப்படுத்தும்.

உடலின் திரவத்தில் இயங்கும் சிறிய பேட்டரி கொண்டது; வயர்கள் இல்லை. ரேடியோ அலைகளுக்கு பதில் ஒளி பயன்படுத்துவதால் சிறியது.

சிறிய அளவுள்ளதால் பெரியவர்களுக்கும் பயனுள்ளதாகும். பல இதயமுடுக்கிகளைப் பயன்படுத்தி இதயத் துடிப்பை சிறப்பாக ஒத்திசைக்கலாம். செயற்கை வால்வுகளுடன் பயன்படுத்தலாம். நரம்பு, எலும்பு சிகிச்சைக்கும், வலி நிவாரணத்திற்கும் உதவும். எதிர்காலத்தில் இது உயிர்காக்கும் தீர்வாகலாம்.

Summary: Scientists at Northwestern University have developed the world’s smallest, biodegradable pacemaker, smaller than a grain of rice. It dissolves naturally in the body, eliminating the need for surgical removal, and is particularly beneficial for children with congenital heart defects.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *