நடிகர் மணிகண்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, நக்கலைட்ஸ் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கிய “குடும்பஸ்தன்” படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
குடும்பஸ்தன் – ஒரு வெற்றிப் படம்!
எஸ்.வினோத்குமார் தயாரித்துள்ள இப்படத்தில் சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், ஆர்.சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், கனகம்மா, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜனவரி 24ம் தேதி வெளியான இப்படம், விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் சூப்பர் ஹிட் என பேசப்படுகிறது.
பாக்ஸ் ஆபிஸில் மாஸான வசூல்!
முதல் நாளில் – ₹1 கோடி
இரண்டாவது நாளில் – ₹2.2 கோடி
5 நாட்கள் முடிவில் – ₹9.9 கோடி வசூலித்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இப்படம் வார இறுதி நாட்களில் மேலும் தன்மதிப்பை உயர்த்தும் வகையில் கலெக்ஷன் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.