ராஷ்மிகா மந்தனாவின் புதிய வெற்றிப்படம் – ‘சாவ்வா’ விமர்சனங்கள் சூடுபிடிக்கின்றன.

0010.jpg

நடிகை ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை வழங்கி வருகிறார். ‘அனிமல்’ மற்றும் ‘புஷ்பா 2’ போன்ற மெகா பிளாக்பஸ்டர் படங்களுக்குப் பிறகு, தற்போது அவர் நடித்துள்ள ‘சாவ்வா’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

பெரும் பொருட்செலவில் உருவான வரலாற்றுப் படம்

இந்தியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘சாவ்வா’ திரைப்படம், சத்ரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜி மகாராஜின் வீர வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. விக்கி கவுஷல், ராஷ்மிகா மந்தனா, அக்‌ஷய் கன்னா, அஷுதோஷ் ராணா உள்ளிட்ட பல பிரபலங்கள் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிப்ரவரி 14ம் தேதி வெளியான இப்படம், அதிகாலை காட்சிகளிலேயே ரசிகர்களால் வரவேற்கப்பட்டு, பாலிவுட்டுக்கு மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமர்சனங்கள் எப்படி இருக்கின்றன?

பிரபல விமர்சகர் தரன் ஆதர்ஷ், ‘சாவ்வா’ ஒரு பிரமாண்டமான வரலாற்று படைப்பு என்று புகழ்ந்து, 4.5/5 ரேட்டிங் வழங்கியுள்ளார். இந்திய வரலாற்றை உணர்ச்சிபூர்வமாகவும், திரையரங்கில் விறுவிறுப்பாகவும் கொண்டு வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

விக்கி கவுஷல் மகாராஜா சாம்பாஜியாக அதிரடி காட்டியிருப்பதை விட, அக்‌ஷய் கன்னா அவுரங்கசிப் கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்திருப்பதாகவும், அவருக்கே சிறந்த வில்லன் விருது வழங்கப்பட வேண்டும் என விமர்சனங்கள் வெளிவருகின்றன.

ரசிகர்கள் கொண்டாட்டம்!

மகாராஷ்ட்ரா உள்ளிட்ட பல இடங்களில் ரசிகர்கள், விக்கி கவுஷலின் நடிப்பை மொபைலில் பதிவு செய்து பகிர்ந்து கொண்டுள்ளனர். படம் முடிந்ததும், தியேட்டரில் “சாம்பாஜி மகாராஜுக்கு ஜெய்” என கோஷம் எழுப்பிய வீடியோக்கள் வைரலாகின்றன.

சிறப்பான படம்… ஆனால் இசை ஏமாற்றம்?

எல்லா அம்சங்களும் சிறப்பாக இருந்தாலும், ஏ.ஆர். ரஹ்மான் வழங்கிய இசை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என சில விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. விமர்சகர் சுமித் கடேல், இப்படத்திற்கு 3/5 ஸ்டார் மட்டுமே வழங்கியுள்ளார்.

ராஷ்மிகாவுக்கான இன்னொரு 1000 கோடி படம்?

புஷ்பா 2, அனிமல் படங்களுக்குப் பிறகு ராஷ்மிகா மந்தனாவுக்கு இன்னொரு 1000 கோடி வசூல் படம் ‘சாவ்வா’ ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பான்-இந்தியா ரிலீஸாக இது வெளியானதில்லை என்றாலும், இந்தி ரசிகர்கள் புஷ்பா 2, ஸ்ட்ரீ 2 போன்ற படங்களை கொண்டாடியதைப் போல இதையும் கொண்டாடுவார்கள் என்று கூறப்படுகிறது.

இன்னும் சில நாட்களில் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் எந்த அளவுக்கு சாதனை படைக்குமோ என்பதை ஆவலுடன் பார்ப்போம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *